2009-12-23 15:29:09

காசா பகுதியில் துன்பம் நிறைந்த கிறிஸ்துமஸ் 


டிச.23,2009 இந்த கிறிஸ்துமஸ் பல துன்பம் நிறைந்த நினைவுகளையேத் தருகின்றதென காசா பகுதியில் வாழும் ஒரு குடும்பத்தலைவர் கூறியுள்ளார். காசா நகரில் வாழும் Hanna Mickae கடந்த ஆண்டு தான், தன் மனைவி, இரு குழந்தைகள் என்று நால்வரும் கிறிஸ்துமஸ் நேரத்தில் குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்ட தங்கள் வீட்டுக்கு முன்னால், பயத்துடன் அமர்ந்திருந்ததை இன்னும் மறக்கமுடியவில்லை என்று கூறினார். இந்த ஆண்டாகிலும் சமாதானத்தின் இளவரசனாய் இயேசு பிறந்த பெத்லேகமுக்கு கிறிஸ்துமஸ் நாளன்று சென்று வர ஆவலாய் உள்ளது ஆயினும் அது எளிதில் முடியாத ஒரு காரியம், ஏனெனில் காசாப் பகுதியில் வாழ்பவர்களுக்கு பெத்லேகம் செல்ல இஸ்ராயேல் அரசு அனுமதி அளிப்பது அரிது என அவர் மேலும் கூறினார்.All the contents on this site are copyrighted ©.