2009-12-23 15:29:42

கோபன்ஹாகன் மாநாடு பெரும் தோல்வி என்கிறது ஸ்வீடன்


டிச.23,2009 கோபன்ஹாகனில் சென்றவாரம் நடந்து முடிந்த தட்பவெப்பநிலை குறித்த உலக மாநாடு ஒரு பெருந்தோல்வி என்று ஸ்வீடன் சுற்றுச்சூழல் அமைச்சர் அந்திரியாஸ் கார்ல்க்ரென் (Andreas Carlgren) கூறியுள்ளார் என செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.
பருவநிலை மாற்றம் தொடர்பாக அடுத்து என்ன செய்வது என்று விவாதிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்துக்காக பிரஸ்ஸல்ஸ் வந்திறங்கிய கார்ல்க்ரென், ஐரோப்பிய ஒன்றியமும், உலகின் மற்ற பாகங்களும், இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டு, மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், . பருவநிலை மாற்றம் குறித்த கோபன்ஹாகன் மாநாடு சிரமங்களும் சிக்கல்களும் நிறைந்திருந்தது என்றும் இதில் சிறியதொரு முன்னேற்றமே காணப்பட்டுள்ளது என்றும் ஜெர்மன் சுற்றுச்சூழல் அமைச்சர் நோபெர்ட் ராய்ட்ஜென் (Nobert Röttgen) கூறியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.All the contents on this site are copyrighted ©.