2009-12-23 15:30:18

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆர்வமில்லை


டிச.23,2009 இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நாட்டின் பல பகுதிகளிலும் பரபரப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ள போதிலும், வடக்கே போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அத்தகைய ஆர்வத்தை காணமுடியவில்லை என செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. தமது துயர நிலைமைக்குச் சரியான நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில் தேர்தல் குறித்துச் சிந்திப்பதற்கில்லை எனவும், தேர்தல் அவசியம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் தமக்குப் பல வருடங்களாகவே வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை எனவும் பல்தரப்பட்ட கருத்துக்களை இடம்பெயர்ந்த மக்கள் வெளியிடுகின்றனர் என இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.All the contents on this site are copyrighted ©.