2009-12-22 15:29:00

நாசரேத் அகழ்வாராய்ச்சிகள், இயேசு காலத்திய வாழ்வு முறைகள் பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளன


டிச.22,2009 இயேசு வளர்ந்த நாசரேத்தில் இடம் பெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள், முதன் முறையாக இயேசு காலத்தில் நாசரேத்தின் வாழ்வு முறைகள் பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளன என்று இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வுக்கான அலுவலகம் அறிவித்தது.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய இந்த அலுவலக இயக்குனர் Yardenna Alexandre, இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கட்டிடம் சிறியதாகவும் எளிமையானதாகவும், அக்காலத்தில் நாசரேத்தின் வாழ்வை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கின்றது என்று கூறினார்.
அதில் எழுதப்பட்டுள்ள சில வரிகள், முதல் நூற்றாண்டில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்தச் சிறிய யூதக் கிராமத்தின் வாழ்வு முறையை வெளிப்படுத்துவதாக உள்ளன என்றார் அவர்.
இதுவரை அக்காலத்திய சில கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அலெக்ஸாண்டர் கூறினார்.
இந்த அகழ்வாராய்ச்சிகள், நாசரேத்து மங்களவார்த்தை பசிலிக்காவுக்கு அருகில் சர்வதேச மரியா மையத்தின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடையனவாகும்.







All the contents on this site are copyrighted ©.