2009-12-22 15:29:12

குடி பெயரும் மக்களுக்காக பணி புரிய பலர் முன் வராமல் இருப்பதற்குக் காரணம் பயமும் முற்சார்பு எண்ணங்களுமே
 


டிச.22,2009 மலேசியாவி்ல் நாடு விட்டு நாடு குடி பெயரும் மக்களுக்காக பணி புரிய பலர் முன் வராமல் இருப்பதற்குக் காரணம் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிரானவர்களாக அவர்களை அரசு சந்தேகத்துடன் பார்க்கக் கூடும் என்பது தான் என குடிபெயர்ந்தோருக்கான பணியில் ஈடுபட்டிருக்கும் திருச்சபை பணியாளர்கள் கூறியுள்ளனர்.
சட்டரீதியான ஆவணங்கள் இன்றி உழைக்கும் தொழிலாளிகள் மத்தியில் பணி புரிபவர்களுக்கு அரசு அதிகமான தொல்லைகள் தருவதில்லை எனவும் அப்படியே ஒரு சூழ்நிலை உருவானாலும் ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை விட இறைவனின் பிரறன்புக் கட்டளை அதிக முக்கியமானது என்று மலேசியாவின் குடிபெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர் ஜோக்கிம் சேவியர் தெரிவித்தார்.
மலேசியாவின் பல மறைமாவட்டங்களில் குடிபெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய சேவியர், குடிபெயர்ந்தோரால் நாட்டில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், நோய்கள் பல இவர்கள் வழியாக நாட்டுக்குள் நுழைவதாகவும் தொடர்பு சாதனங்கள் கூறிவருவதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டார்.
இக்கருத்தரங்கைத் துவக்கிவைத்து திருப்பலி ஆற்றிய மெலாகா-ஜோஹோர் (Melaka-Johor) மறைமாவட்ட ஆயர் Paul Tan Chee Ing, குடிபெயர்ந்தோருக்கான பணி மலேசியத் திருச்சபையின் முக்கிய பணியாக விளங்கும் என்று கூறினார்.All the contents on this site are copyrighted ©.