2009-12-22 15:28:47

சட்ட விரோதக் குடியேற்றதாரரைக் கட்டுப்படுத்தும் விவகாரங்கள் குறித்து இத்தாலி, லிபியாவுடன் செய்துள்ள உடன்பாடுகள் குறித்து ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் கேள்வி


டிச.22,2009 சட்ட விரோதக் குடியேற்றதாரரைக் கடல் பகுதியில் கட்டுப்படுத்தும் விவகாரங்கள் குறித்து இத்தாலி, லிபியாவுடன் செய்துள்ள உடன்பாடுகள் குறித்து ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் அவையின் மையக்குழு விளக்கம் கேட்டுள்ளது.
இத்தாலிய அரசிடம் நட்பு கலந்த உணர்வுடன் தெளிவான விளக்கம் கேட்டுள்ள இம்மையக்குழு, இவ்வுடன்பாடானது, ஐரோப்பிய சமுதாய அவையின் உடன்பாடுகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஒத்ததாக இருக்கின்றனவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இத்தாலியில் குடியேற்றதாரர், புகலிடம் தேடுவோர் மற்றும் அகதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும் அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் இவ்வவை தனது கவலையை தெரிவித்துள்ளது.
KEK என்ற ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் அவையில், கத்தோலிக்க, ஆர்த்தாடாக்ஸ், பிரிந்த கிறிஸ்தவ சபைகள், ஆங்லிக்கன் என 120 சபைகள் உறுப்பினர்களாக உள்ளன.All the contents on this site are copyrighted ©.