2009-12-22 15:28:17

ஜாஷ்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் கெர்கெட்டா


டிச.22,2009 இந்தியாவின் ஜஷ்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்திரு இம்மானுவேல் கெர்கெட்டாவை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இதுவரை ஜஷ்பூர் மறைமாவட்டத்தின் நிர்வாகியாக பணியாற்றிய புதிய ஆயர் கெர்கெட்டா, அதே மறைமாவட்டத்தின் காட்மஹூவா கிராமத்தில் 1952ம் ஆண்டு பிறந்தார். ராஞ்சி இளங்குருமடத்தில் சேர்ந்த இவர், 1984ல் ஜாஷ்பூர் மறைமாவட்டத்திற்கென குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார்.

2006 முதல் 2008 வரை ஜஷ்பூர் மறைமாவட்ட குருகுல அதிபராக பணியாற்றிய இவர், 2008ம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் நிர்வாகியாகப் பணியாற்றி வந்தார்.

ஜாஷ்பூர் மறைமாவட்டத்தின் ஆயர் விக்டர் கின்டோ, 2008ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி திடீரென இறந்ததையடுத்து அம்மறைமாவட்டம் இதுவரை ஆயரில்லாமல் காலியாக இருந்தது.

1,88,820 கத்தோலிக்கரைக் கொண்ட ஜாஷ்பூர் மறைமாவட்டத்தில் 50 பங்குகளும் 170 குருக்களும் 335 அருட்சகோதரிகளும் 44 குருத்துவ மாணவர்களும் இருக்கின்றனர்.
All the contents on this site are copyrighted ©.