2009-12-22 15:22:17

நம்பிக்கை செய்தி - கந்தமால் மாவட்டத்தில் இந்து-கத்தோலிக்க இளைஞர் குழு கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து இவ்வாண்டு கிறிஸ்துமசைக் கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறது


டிச.22,2009 ஒரிசா மாநிலத்தின், கந்தமால் மாவட்டத்தில் கலக்கத்தில் வாழும் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து இவ்வாண்டு கிறிஸ்துமசைக் கொண்டாடுவதற்கு அம்மாநிலத்தின் இந்து-கத்தோலிக்க இளைஞர் குழு ஒன்று தயாராகி வருகிறது.

கடந்த ஆண்டு சுமார் ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்கள் முகாம்களில் கிறிஸ்துமசைக் கொண்டாடினர், ஆனால் இவ்வாண்டு நிலைமை வேறுவிதமாக இருக்கும் என்று இந்துமத இளைஞர் அணி தலைவர் ஹிமாங் ஷூ (Himang Shu) தெரிவித்தார்.

ஒரிசா அரசு, கந்தமால் மாவட்டத்திலிருந்து Himang Shu, இன்னும் 23 இந்து மற்றும் கிறிஸ்தவ இளையோரைத் தேர்ந்தெடுத்து அசாமிலுள்ள சலேசிய சபையின் தொன்போஸ்கோ இளையோர் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பியது. இங்கு பயிற்சி பெற்றுத் திரும்பியுள்ள பல்வேறு இனங்களைச் சார்ந்த இவர்கள் கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இளையோர் அணி கந்தமால் மாவட்டத்தில் 120க்கும் மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து செயல்படுகின்றது. இதில் நான்காயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
All the contents on this site are copyrighted ©.