2009-12-22 15:54:38

திருவருகைக்கால சிந்தனை


அன்பர்களே, இன்றைய திருப்பலியில் காணப்படும் முதல் வாசகமும், திருப்பாடலும் நல்ல பல சிந்தனைகளை எழுப்புகின்றன. இந்த வாசகங்களே நமது திருவருகைக் கால சிந்தனைகளாகட்டும்.
மலாக்கி 3 1-4
இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்: அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார் என்கிறார் படைகளின் ஆண்டவர். அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார்.

திருப்பாடல்கள் 25ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்: உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்: ஆண்டவர் நல்லவர்: நேர்மையுள்ளவர்: ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்: எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு , அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்: ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன். கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.All the contents on this site are copyrighted ©.