2009-12-21 16:35:52

நம்பிக்கை செய்தி - மாயோன் எரிமலைக் குழம்பு வெளிப்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு லெகாஸ்பி மறைமாவட்டம் உடனடி அவசர உதவி


டிச.21,2009 பிலிப்பைன்ஸின் மாயோன் எரிமலைக் குழம்பு வெளிப்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடி அவசர உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது அந்நாட்டின் லெகாஸ்பி மறைமாவட்டம்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் 22 மையங்களுக்கு ஏற்கனவே பொருட்களை விநியோகித்துல்ளதாக அறிவித்த லெகாஸ்பி மறைமாவட்டத்தின் இடர்துடைப்பு உதவி ஒருங்கிணைப்பாளர் ஆன்பாரோதில்லா, மக்களின் இன்றைய அத்தியாவசிய தேவைகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மாயோன் எரிமலை ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை வாழும் மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பெரும்பாலான மக்களுக்குத் தன் கோவில்களிலும் பள்ளிகளிலும் ஏனைய கட்டிடங்களிலும் அடைக்கலம் கொடுத்துள்ளது தலத்திருச்சபை.

மாயோன் எரிமலை, 1616ம் வருடம் முதல் 49 முறை தீக்குழம்புகளைக் கக்கியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


All the contents on this site are copyrighted ©.