2009-12-21 16:36:47

கிறிஸ்துமஸ் கண்காட்சி-இந்துமதத் தீவிரவாதிகள் தாக்குதல்


டிச.21,2009 கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி இந்தியாவின் குவாலியர் நகரில் இடம் பெற்ற இரண்டு நாள் கண்காட்சியின் போது உள்ளே புகுந்த இந்துமதத் தீவிரவாதிகள் அதனைத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.

கிறிஸ்துவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியக் கண்காட்சியை இஞ்ஞாயிறன்று இந்துக் கடவுள்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே தாக்கிச் சேதப்படுத்திய இக்குழுவின் நான்கு பேர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருக்க, ஒருவரை மட்டும் காவல்துறை இதுவரை கைது செய்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து கவலையை வெளியிட்ட போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்காகத் தயாரித்து வரும் இவ்வேளையில் இடம் பெற்றிருக்கும் இச்செயல் அச்சத்தைத் தரும் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்றார்.

2003ம் ஆண்டு பிஜேபி கட்சி மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிறிஸ்தவர்களுக்கெதிரானத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
All the contents on this site are copyrighted ©.