2009-12-21 16:34:58

லொசர்வாத்தோரே ரொமானோ அலுவலகர்களுக்குத் திருத்தந்தை தனது வாழ்த்து


டிச.21,2009 மூவேளை செபத்திற்குப் பின்னர், L'Osservatore Romano என்ற திருப்பீட சார்பு தினத்தாளின் அலுவலகர்களுக்குத் தனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை.

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில், ஞாயிறு மற்றும் புதன் தினங்களில் புனித பேதுரு வளாகத்தில் செய்தி விளம்பரப் பலகைகளை வைத்து, இயேசு பிறப்பு பற்றிய சிறிய படத்துடன் இச்செய்தித் தாளையும் விற்க இப்பணியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, இந்நடவடிக்கை, வத்திக்கான் செய்தித்தாளை விற்பதற்கு மட்டுமல்லாமல், காங்கோ ஜனநாயகக் குடியரசில் பள்ளி ஒன்றைக் கட்டுவதற்காகவும் இடம் பெறுகின்றது என்றார்.

மேலும், ஸ்பானிய தினத்தாள் லா ரஜோன் அதன் ஞாயிறு பதிப்பில், லொசர்வாத்தோரே ரொமானோவின் ஞாயிறு பதிப்பையும் இணைப்பதன் மூலம் இதன் சர்வதேச விநியோகம் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
All the contents on this site are copyrighted ©.