2009-12-21 14:51:27

திருவருகைக்கால சிந்தனை


திருவருகைகாலச் சிந்தனை - தயாரித்தவர் அருள்தந்தை இம்மானுவேல் சே.ச

வாசிப்பவர் அருள்தந்தை பெர்னார்டின் ம.ஊ.ச

RealAudioMP3 ஆண்டவரின் இரக்கத்தில் வாழ்வது :

திருமுழுக்கு யோவானின் பிறப்பு “சக்கரியா-எலிசபெத்” ஆகிய இருவருக்கு மட்டும் கிடைத்த இறைவனின் கொடை அல்ல. அச்சமூகத்தில் வாழ்நத் அனைவருக்குமே கிடைத்த இறைவனின் கொடை. யோவான் என்றால் ஆண்டவர் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பது பொருள். ஆண்டவரின் இரக்கம் சக்கரியா-எலிசபெத் ஆகிய இருவருக்கு மட்டும் சொந்தம் அல்ல. இக்குழந்தை இறைவனின் கைவன்மையைப் பெற்றுள்ளது என நம்பிய அனைவருக்குமே சொந்தமாயிற்று. மேலும், அக்குழந்தை ஆண்டவரின் இரக்கப் பெருக்கை வெளிப்படுத்தியதாக நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் இரக்கத்தை நாமும் புனித திருமுழுக்கு யோவானைப் போல பெற்றுள்ளோம் என நம்புவதில் ஏன் தயக்கம்? நாம் உயிருடன் வாழ்வதே இரக்கம் நம்மில் செயலாற்றுவதற்கான ஓர் உயிரோட்டமுள்ள அடையாளம். நாம் வாழ்வது இறைவனின் இரக்கம் நம்மில் செயலாற்றுவதற்கானச் சாட்சி. இறைவனின் இரக்கம் நம்மில் என்றும் செயல்படட்டும். நம் வாழ்வு பலருடைய மகிழ்ச்சிக்கு அடித்தளமிடட்டும்!.
All the contents on this site are copyrighted ©.