2009-12-19 17:01:04

நம்பிக்கைச் செய்தி: 2010ம் ஆண்டில் சர்வதேச இளையோர் ஆண்டை அறிவிப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது

 


டிச.19,2009 இன்றைய சமுதாயம் எதிநோக்கும் சவால்களை மேற்கொள்வதற்கென, உலகின் இளையோரின் சக்தியையும் கற்பனையையும் முன்னெடுப்புகளையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2010ம் ஆண்டில் சர்வதேச இளையோர் ஆண்டை அறிவிப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

ஐ.நா.வின் சர்வதேச இளையோர் ஆண்டு 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கும் என்று கூறிய ஐ.நா.வின் இளையோர்க்கான Youth Nicola Shepherd, சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் இளையோரின் முழுமையான மற்றும் சாரமான பங்கீட்டை இச்சர்வதேச ஆண்டு வளர்க்கும் என்று கூறினார்.

இச்சர்வதேச ஆண்டில், நாடுகளிலும் சர்வதேச அளவிலும் இடம் பெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அரசுகளும் குடி மக்கள் சமுதாயமும் தனியாட்களும் சமூகங்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு ஐ.நா.பொது அவை கேட்டுக் கொண்டது.

"உரையாடலும் ஒருவர் ஒருவரைப் புரிந்து கொள்ளுதலும்" என்ற தலைப்பில் சர்வதேச இளையோர் ஆண்டு கடைபிடிக்கப்படும்.

2010, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 13 வரை Istanbulலில் 5வது இளையோர் மாநாடும், ஆகஸ்ட் 24 முதல் 27 வரை மெக்சிகோ நகரில் இளையோருக்கான உலகக் கருத்தரங்கும் இடம் பெறும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. 








All the contents on this site are copyrighted ©.