2009-12-19 16:54:12

திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் மற்றும் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலை வணக்கத்துக்குரியவர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார்


டிச.19,2009 புனிதர் மற்றும் முத்திப்பேறு பெற்ற நிலைகளுக்கு உயர்த்துவதற்கென இறையடியார்கள் திருத்தந்தையர்கள் பத்தாம் பத்திநாதர், இரண்டாம் ஜான் பவுல் உட்பட ஐந்து முத்திப் பேறு பெற்றவர்கள் மற்றும் பத்து இறையடியார்களின் பெயர்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

புனிதர் நிலைக்கு உயர்ததும் திருப்பேராயத் தலைவர் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ இச்சனிக்கிழமை திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து, திருத்தந்தையர்கள் பத்தாம் பத்திநாதர், இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் வீரத்துவமான பண்புகள், இன்னும் 1984ம் ஆண்டு கம்யூனிச காவல்துறையால் கொல்லப்பட்ட போலந்து மறைசாட்சி குரு Jerzy Popieluszko, ஆஸ்திரேலிய அருட்சகோதரி மேரி மக்கில்லோப்பின் பரிந்துரையால் இடம் பெற்ற புதுமை உட்பட பத்துப் பேரின் பரிந்துரைகளால் இடம் பெற்ற புதுமைகள் மற்றும் வீரத்துவமான பண்புகளைச் சமர்ப்பித்தார்.

யூஜெனியோ பச்செல்லி என்ற திருத்தந்தை பத்தாம் பத்திநாதர், உரோமையில் 1876ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி பிறந்தார். காஸ்தெல்கன்டோல்போவில் 1958ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இறந்தார். இன்னும், கரோல் வொய்த்தில்யா என்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், போலந்தின் வாடோவிச்சேயில் 1920ம் ஆம்டு மார்ச் 18ம் தேதி பிறந்து 2005ம் ஆம்டு ஏபரல் 2ம் தேதி வத்திக்கானில் இறந்தார்







All the contents on this site are copyrighted ©.