2009-12-19 17:03:41

சுற்றுச் சூழல் சம்பந்தப்பட்ட புதிய அகதிகளுக்கு உதவுவதற்கு பசிபிக் பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ சபைகள்  தயாரிக்கத் தொடங்கியுள்ளன 


டிச.19,2009 சுற்றுச் சூழல் சம்பந்தப்பட்ட இலட்சக்கணக்கான புதிய அகதிகளுக்கு உதவுவதற்கு பசிபிக் பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ சபைகள் தங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன என்று Fides செய்தி நிறுவனம் அறிவித்தது.

உலக வெப்பநிலை மாற்றத்தினால், தென் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில், 2050ம் ஆண்டுக்குள் 20 கோடிக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஆவார்கள் மற்றும் புலம் பெயர்வார்கள் என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளதையடுத்து கிறிஸ்தவ சபைகள், பிறரன்பு நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகின்றன.

வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி, புயல்கள், வெள்ளம், கடல்மட்ட உயர்வு போன்றவை குறித்து மக்கள் மத்தியில், குறிப்பாக பசிபிக் பகுதி மக்கள் மத்தியில் கிறிஸ்தவ சபைகள் விழிப்புணர்வை ஏறுபடுத்தி வருகின்றன.

உலகிலுள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டவர்கள், ஆசியாவிலும் பசிபிக் பகுதியிலும் வாழ்கின்றனர். 








All the contents on this site are copyrighted ©.