2009-12-19 16:56:49

சிறார் சிறியவர்களாக இருந்தாலும் இயேசு அவர்களைப் பார்க்கிறார், அவர்கள் பேசுவதைக் கேட்கிறார்- திருத்தந்தை


டிச.19,2009 இத்தாலிய கத்தோலிக்க கழகத்தின் சிறாரை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் இயேசு அவர்களைப் பார்க்கிறார், அவர்கள் பேசுவதைக் கேட்கிறார் என்று கூறினார்.

இயேசுவை மகிழ்ச்சியோடு சந்தித்த சக்கேயு போல சிறாரும் இயேசுவோடும் பிறரோடும் மகிழ்ச்சியுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டுமென்றார் அவர்.

இயேசுவைத் தன் வீட்டில் விருந்துண்ண அழைத்த சக்கேயு போல சிறாரும் இயேசுவைத் தங்களது தினசரி வாழ்விலும் விளையாட்டுகள், செபங்கள், வேலைகள், இன்னும் இன்ப மற்றும் பயமான நேரங்களிலும் வரவேற்க வேண்டுமென்றார்.
All the contents on this site are copyrighted ©.