2009-12-18 16:10:29

நம்பிக்கை செய்தி - கேரளாவில், கத்தோலிக்க மற்றும் ஆர்த்தாடக்ஸ் சபைகளுக்கிடையே குருத்துவப் பணிகளைப் பகிர்வது குறித்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன


டிச.18,2009 கேரளாவில், கத்தோலிக்க மற்றும் ஆர்த்தாடக்ஸ் சபைகளின் 356 வருட பிரச்சனைக்குரிய வரலாற்றில் குருத்துவப் பணிகளைப் பகிர்வது குறித்த ஒப்பந்தங்கள் முதன் முறையாக ஏற்பட்டுள்ளன என்று யூக்கா செய்தி நிறுவனம் அறிவித்தது.

முதல் நடவடிக்கையாக, கேரளாவுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் ஞாயிறு திருப்பலிகள் நிகழ்த்துவதற்கு ஆலயங்களைக் கொடுத்து உதவுவதற்கு இவ்விரு சபைகளும் தெரிவித்துள்ளன.

கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் அவையும் சிரியன் ஜாக்கோபைட் மற்றும் சிரியன் ஆர்த்தடாக்ஸ சபைகளும் அண்மையில் நடத்திய கூட்டத்தில் இவ்விரு சபைகளுக்கிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பது குறித்துப் பேசப்பட்டது.

இச்சபைகள் தங்கள் கல்லறை இடங்களை ஒருவர் மற்றவருடன் பகிர்ந்து கொள்வது, அடக்கச் சடங்குகளை நிறைவேற்றக் குருக்களைப் பகிர்வது போன்றவற்றுக்கான வாய்ப்புக்களும் இக்கூட்டத்தில் இடம் பெற்றன.

தற்போதைய நிகழ்வுகள் கேரள தாமஸ் கிறிஸ்தவர்கள் வரலாற்றில் ஒருமைல்கல் என்று சிரியன் ஜாக்கோபைட் சபைத் தலைவர் கூறியுள்ளார்.

கேரளாவில், போர்த்துக்கீசிய மறைபோதகர்கள் கிறிஸ்தவர்களை இலத்தீன்ரீதிக்கு மாற்றத் தொடங்கிய 1653ம் ஆண்டுக்குப் பின்னர் கத்தோலிக்கருக்கும் ஆர்த்தாடக்ஸ் சபைகளுக்கிடையே பிரிவினைகள் ஏற்படத் தொடங்கின என்று சொல்லப்படுகின்றது







All the contents on this site are copyrighted ©.