2009-12-18 16:12:29

சுற்றுலா பயணிகளால் முன்வைக்கப்படும் சவால்களைக் எதிர்நோக்குவதற்கு உதவியாக கோவா-டாமன் பேராயர் சில வழிமுறைகளை வழங்கியுள்ளார்


டிச.18,2009 கத்தோலிக்கர், சுற்றுலா பயணிகளால் முன்வைக்கப்படும் சவால்களைக் எதிர்நோக்குவதற்கு உதவியாகச் சில வழிமுறைகளை வழங்கியுள்ளார் கோவா-டாமன் பேராயர் பிலிப்நேரி பெராவோ.

“கோவாவில் இன்று சுற்றுலாவின் சவால்களும் வருங்கால வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ள பேராயர், சுற்றுலா பயணிகளால், நல்ல விழுமியங்கள் சிதைந்துள்ளன, இயற்கை வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, பெண்கள் மற்றும் சிறார் மீதான அவமதிப்பு அதிகரித்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறையில் வேலை செய்வோரில் பலர், வேலைப்பளுவால் ஞாயிறு திருப்பலிக்குக்கூட வர இயலாமல் இருப்பதையும் கவலையோடு குறிப்பிட்டுள்ள அவர், சுற்றுலா தொடர்புடைய பகுதிகளில் பணி செய்யும் குருக்கள் தங்கள் விசுவாசிகளின் ஆன்மீகத் தேவைகளில் அக்கறை காட்டுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரபிக்கடற்கரைப் பகுதியிலுள்ள கோவாவிற்கு ஆண்டுதோறும் சுமார் இருபது இலட்சம் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இவர்கள் அம்மாநில மக்கட்தொகையான சுமார் 14 இலட்சத்தைவிட அதிகம். அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் ஏறக்குறைய 30 விழுக்காடாகும்.
All the contents on this site are copyrighted ©.