2009-12-17 14:39:09

இளைய தலைமுறைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதில் பெலாரூஸ் ஆயர்கள் மிகுந்த முயற்சிகள் மேற்கொள்ள திருத்தந்தை அழைப்பு


டிச.17,2009 பெலாருஸ் நாட்டு கிரேக்க-கத்தோலிக்க ரீதி ஆயர்களை, அட் லிமினாவை முன்னிட்டு இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இளைய தலைமுறைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதில் பெலாரூஸ் ஆயர்கள் மிகுந்த முயற்சிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

உலகாயுதப்போக்கு, இன்பமே சிறந்ததென்ற கோட்பாடு, சார்பியல் கோட்பாடு, பிறப்பு விகிதம் குறைதல், சிதையும் குடும்பங்கள், வெளிநாடுகளில் குடியேறுதல் போன்ற பிரச்சனைகளை சமுதாயத்தில் எதிர்நோக்கும் ஆயர்கள் அவற்றின் மத்தியிலும் தங்களது மேய்ப்புப்பணியை ஊக்குமுடன் செய்து வருவது குறித்த தனது பாராட்டையும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு அழைத்தல்களை, குறிப்பாக குருத்துவ மற்றும் துறவற அழைத்தலை ஏற்பவர்களை நன்கு தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்களுக்கான பயிற்சியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Belarus ஆர்த்தாடாகஸ் கிறிஸ்தவ சபையினரோடு நிலவும் சுமுகமான உறவுகள் தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்
All the contents on this site are copyrighted ©.