2009-12-17 15:12:39

புதிய குருக்களை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் சந்தித்து தன் வாழ்த்துக்களையும் ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை


டிச.17,2009 குருக்களுக்கென அற்பணமாக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் புனித ஜான் மரியா வியான்னியிடமிருந்து புதிய குருக்களான நீங்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும். உங்களையே முழுமையாக கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபையின் சேவைக்கும் அர்ப்பணிக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் கூறினார். கடந்த சனிக்கிழமை ரோமையின் புனித பவுல் பேராலயத்தில் புதிதாக திருநிலை படுத்தப்பட்ட 59 புதிய குருக்களை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் சந்தித்து தன் வாழ்த்துக்களையும் ஆசீரையும் அளித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார். கிறிஸ்துவின் படை (Legion of Christ) என்று அழைக்கப்படும் சபையைச் சார்ந்த இக்குருக்களை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தொனேயும் சந்தித்து வாழ்த்தினார். இச்சபையில் தற்போது நடைபெறும் திருப்பீட ஆய்வுகள் (Visitation) வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடையும் எனவும் கர்தினால் பெர்தொனே தெரிவித்தார்.All the contents on this site are copyrighted ©.