2009-12-17 15:13:57

கிறிஸ்தவ மருத்துவ சங்கத்தின் தலைவர் அமெரிக்க மருத்துவ சங்கத்திலிருந்து விலகல்


டிச.17,2009 கிறிஸ்தவ மருத்துவ சங்கத்தின் தலைவரான David Stevens என்ற மருத்துவர் இனி தான் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் அங்கத்தினர் இல்லை என்று அறிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்களவையில் நல வாழ்வு குறித்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு அமெரிக்க மருத்துவ சங்கம் தன் ஆதரவை அளித்துள்ளதால், தொடர்ந்து அந்த சங்கத்தில் தன்னால் நீடிக்க முடியவில்லை என்று David Stevens செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நல வாழ்வு மசோதாவின் மூலம் மக்களின் வரிப்பணம் கருகலைப்பு, ஒரே பாலின திருமணம் போன்ற பல திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தன்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்க மருத்துவ சங்கத்தின் அங்கத்தினர்களாக உள்ள கிறிஸ்தவ மருத்துவ சங்கத்தின் 17,000 அங்கத்தினர்களையும் அந்த சங்கத்திலிருந்து விலகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் Dr David Stevens.All the contents on this site are copyrighted ©.