2009-12-16 16:25:36

நம்பிக்கைச் செய்தி:கோவில்கள் எழுப்புவதைப் போல் பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களுடன் சமுதாயத்தை எழுப்புவதும் நம் கடமை -  கட்டக்-புபனேஸ்வர் பேராயர்


டிச.16,2009 கற்களாலும், மண்ணாலும் கோவில்கள் எழுப்புவதைப் போல் பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களை ஒன்று திரட்டி ஒப்புரவான சமுதாயத்தை எழுப்பவும் நாம் அழைக்கப் பட்டுள்ளோம் என்று கூறினார்  கட்டக்-புபனேஸ்வர் பேராயர் ரபேல் சீனத் (Rapael Cheenath). சென்ற ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்த வன்முறை, கலவரங்களால் பாதிக்கப்பட்ட கந்தமால் பகுதியில் சிமொன்பாடி (Simonbadi) என்ற இடத்தில் புதியதொரு கோவிலை இத்திங்களன்று  அர்ச்சித்து முதல் திருப்பலியாற்றுகையில் பேராயர் இவ்வாறு கூறினார். மா மரியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அழகியக் கோவில் கப்பூச்சின் சபையினரின் கண்காணிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்தது என்றும், பழைய, சிறிய கோவிலில் திருப்பலி காண இடமில்லாது தவித்த மக்கள் இந்த புதிய கோவிலில் திருப்பலி காண செய்யப்பட்டுள்ள வசதிகளைக் கண்டு மகிழ்ந்துள்ளனர் என்றும் பங்குத் தந்தை மத்தியாஸ் பசானி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.