2009-12-16 16:27:09

கிறிஸ்மஸ் காலத்தில் திருத்தந்தைக்கு வாழ்த்துக்களை வத்திக்கான் இணைய தளத்தின் மூலம் அனுப்பலாம்


டிச.16,2009 இந்த கிறிஸ்மஸ் காலத்தில் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்டுக்கு தனிப்பட்டவர்கள் வாழ்த்துக்களை அனுப்ப வத்திக்கான் இணைய தளத்தின் Pope2you.net என்ற முகவரியைப் பயன்படுத்தலாம் என்று இந்த முயற்சியை ஒருங்கிணைப்பவரான அருட்தந்தை பவுலோ பத்ரினி (Paolo Padrini) கூறினார். வத்திக்கான் இணையதளத்தைப் பார்வையிடும் எவரும் அங்கு காணப்படும் குறிப்புகளைப் பின்பற்றி திருத்தந்தைக்கு தங்கள் கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம் என்று கூறினார் அருட்தந்தை பத்ரினி. இதேபோல் Pope2you.net என்ற முகவரியின் மற்றொரு அம்சமாக, Facebookஐ பயன்படுத்தி, திருத்தந்தையின் புகைப்படங்கள் அடங்கிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்புக்கள் உண்டு என்றும், ஆங்கிலம், இத்தாலி, ஜெர்மன், பிரென்ச் ஆகிய மொழிகளில் இந்த வாழ்த்துக்களை அனுப்ப முடியும் என்றும் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.இணைய தளத்தை இன்னும் நல்ல முறையில் எப்படி பயன்படுத்த முடியும் என்ற கருத்துக்களை திருத்தந்தை  செப்டம்பர் மாதத்தில் பகிர்ந்து கொண்டதும், இதே கருத்துக்களை மையமாகக் கொண்ட ஒரு கருத்தரங்கு நவம்பர்   மாதத்தில் வத்திக்கானில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும், வத்திக்கான்     இணையதளத்தை கடந்த எட்டு மாதங்களில் 70 லட்சம் பேர் பார்வையிட்டிருப்பதாக செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.All the contents on this site are copyrighted ©.