2009-12-16 16:26:55

இத்தாலியின் பிரதமர் பெர்லுஸ்கோனி தாக்கப்பட்டதைக் குறித்து திருத்தந்தையும், இத்தாலிய ஆயர்களும் கண்டனம்


டிச.16,2009 இத்தாலியின் மிலான் நகரில் இஞ்ஞாயிறன்று இத்தாலியின் பிரதமர் பெர்லுஸ்கோனி தாக்கப்பட்டதைக் குறித்து திருத்தந்தையும், இத்தாலிய ஆயர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். திருத்தந்தையின் சார்பில் பெர்லுஸ்கோனிக்குத் திருப்பீடச் செயலர் தர்சிஸியோ பெர்தோனே அனுப்பிய தந்தியில், அவர் விரைவில் நலம் பெற திருத்தந்தை தம் ஆசீரை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் அதிகக் கண்டனத்துக்குரிய செயல் என்றும், இனி வரும் காலங்களில் ஒருவரை ஒருவர் மதித்து, நட்புறவோடு வாழும் ஒரு கலாச்சாரத்தை பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் இத்தாலிய ஆயர்கள் கூறியுள்ளனர். வன்முறை எந்தச் சூழ்நிலையில் எழுந்தாலும், அதை சமுதாயத்தின் எல்லா நிலையில் உள்ளவர்களும், எல்லா அரசியல் அமைப்புகளும் உடனடியாக கண்டிக்க வேண்டும் என்று திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் இயேசுசபைக் குரு Federico Lombardi கூறினார்.All the contents on this site are copyrighted ©.