2009-12-16 14:53:06

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


டிச.16,2009 அன்பர்களே, கிறிஸ்துமஸ் பெருவிழா நெருங்கி வரவர, உரோமைக்கு வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா சதுக்கத்தில் வழக்கமாக அமைக்கப்படும் பெரிய குடிலின் கட்டுமானப் பணிகளும் இடம் பெற்று வருகிறது. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் மறைபோதகத்தைக் கேட்பதற்காகப் பல நாடுகளின் ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகள் இப்புதன் காலை பத்து மணியளவில் பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தனர். அவர்களுக்கு 12ம் நூற்றாண்டு இறையியல் வல்லுனர் சாலிஸ்பெர்க் ஜான் பற்றி விளக்கினார் திருத்தந்தை.

RealAudioMP3 அன்பு சகோதர சகோதரிகளே, மத்திய கால கிறிஸ்தவ கலாச்சாரம் பற்றிய நமது மறைக்கல்வியில், 12ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மெய்யியல் மற்றும் இறையியல் வல்லுனர் சாலிஸ்பெர்க் ஜான் பற்றி இன்று பார்ப்போம் என ஆங்கிலத்தில் தனது போதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை.

இங்கிலாந்தில் பிறந்த ஜான், பாரிசிலும் ஷாத்ருவிலும் Chartres கல்வி பயின்றார். புனித தாமஸ் பெக்கெட். Thomas Becket டன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர் திருச்சபைக்கும் அரசர் இரண்டாம் ஹென்றிக்கும் இடையே இடம் பெற்ற பிரச்சனையில் ஈடுபட்டிருந்தார். ஷாத்ருவின் ஆயராக இறந்தார். துணுக்குகளைப் பேசுவதும் சிந்திப்பதும் ஒரு கலை என்று ஜான் எழுதிய Metalogicon என்ற நூலில், உண்மையான மெய்யியல் என்பது இயல்பிலே கருத்துப் பரிமாற்றத்தை எளிதாக்க உதவுவதாக உள்ளது. அது உண்மையிலும் நன்மைத்தனத்திலும் சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு உதவும் ஞானத்தின் செய்தியில் பலனைக் கொடுக்கிறது என்று சொல்லியிருக்கிறார். மனித அறிவின் வரையறைகளை ஏற்கும் அதேவேளை, உரையாடல் மற்றும் விவாதங்கள் வழியாக அது உண்மையை அடைய முடியும் என்று அவர் வலியுறுத்துகிறார். கடவுளின் நிறைவான அறிவில் பங்கு கொள்ளச் செய்யும் விசுவாசம், அதன் முழு வல்லமையை உணர்ந்து கொள்வதற்கான அறிவிற்கு உதவுகிறது. அறநெறி மற்றும் அரசியல் தத்துவங்கள் அடங்கிய Policraticus என்ற தனது மற்றுமொரு நூலில் ஜான், உலகளாவிய இயற்கைச் சட்டம் மற்றும் அது அனைத்து நேர்மறைச் சட்டத்திலும் குறிக்கப்பட வேண்டியதில் அடங்கியுள்ள உண்மையை உள்ளதை உள்ளபடியே அறிவதற்கான அறிவுத் திறமை பற்றிப் பேசுகிறார். மனிதனுக்கான இயற்கை சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள நீதி மற்றும் உண்மையின் கொள்கைகளுக்கான அக்கறை மற்றும் நியாயமான பகுத்துணர்வைப் பயன்படுத்துவதை விடுத்து, இன்றைய உலகின் சார்பியலான கொடுங்கோன்மையினால் தூண்டப்பட்ட சட்டங்களின் அச்சுறுத்தலுக்கு மனித வாழ்வும் மனித மாண்பும் உள்ளாக்கப்பட்டுள்ள பிண்ணனியில் ஜானின் உள்ளுணர்வின் வெளிப்பாடுகள் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்துவதாக உள்ளன.

இவ்வாறு மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருப்பயணிகளை வாழ்த்தி தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். RealAudioMP3

RealAudioMP3 பின்னர், இத்தாலியின் இன்ட்ராட் நகரசபை திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு கௌரவக் குடிமகன் உரிமையையும் வழங்கி மகிழ்ந்தது.
All the contents on this site are copyrighted ©.