2009-12-15 17:09:10

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் இருக்கின்ற அறநெறிக் கூறுகளை உலக வெப்பநிலை மாநாடு ஏற்க வேண்டும் : பேராயர் மிலியோரே


டிச.15,2009 சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் இருக்கின்ற அறநெறிக் கூறுகளை உலக வெப்பநிலை மாநாடு ஏற்க வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹாகன் உலக வெப்பநிலை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே, இந்த மாநாடு, மனிதர், உள்ளூர் மக்கள், ஏழைகள், பாதிப்படையும் ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இம்மாநாடு, கார்பன் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு உருப்படியான தீர்மானங்களw எடுக்கும் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கு ஏழைநாடுகளுக்கு நிதி உதவி செய்வதற்கு வழிகளை அமைக்கும் என்ற தனது நம்பிக்கையையும் பேராயர் மிலியோரே தெரிவித்தார்.

டிசம்பர் 7ம் தேதி தொடங்கிய கோப்பன்ஹாகன் உலக வெப்பநிலை மாநாடு, டிசம்பர் 18 வரை நடைபெறும்.








All the contents on this site are copyrighted ©.