2009-12-15 18:00:49

டிசம்பர் 16 இன்றைய புனிதர் 


புனித அடிலெய்ட் (Adelaide) 
அரச குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் தன் கணவனை இழந்தார். தன் கணவனைக் கொன்று அரச பீடம் ஏறியவரின் மகனை இவர் மணக்க மறுத்ததால் சிறையிலடைக்கப்பட்டார். முதலாம் ஆட்டோ (Otto) என்பவரால் இவர் விடுதலை அடைந்தார்; அவரையே மறுமணம் முடித்தார். அரசன் ஆட்டோவின் மரணத்திற்குப் பின் அரசனான இவரது மகன் தன் மனைவியின் தூண்டுதலால் தாயைப் புறக்கணித்தான். இதனால், அதலாயிதே அரண்மனையை விட்டு வெளியேறினார். புனித மயோலுஸின் (St Majolus) முயற்சியால் தாயிடம் மன்னிப்பு வேண்டினான் அரசன். தன் மகனும் அவனது மனைவியும் ஒருவர்பின் ஒருவர் இறந்ததால், அப்போது மிகச் சிறியவனாய் இருந்த தன் பேரன் மூன்றாம் ஆட்டோவுக்குப் பதில் அதலாயிதே நாட்டை ஆளும் பொறுப்பேற்றார். பேரன் இள வயதடைந்ததும், அவனிடம் நாட்டின் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, தன் எஞ்சிய வாழ்நாட்களில் துறவு மடங்களையும், கோவில்களையும் புதுப்பிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்தினார், புனித அதலாயிதே. இறுதியில் Strasbourg எனும் இடத்தில் உள்ள ஒரு துறவு மடத்தில் 999ஆம் ஆண்டு டிசம்பர் 16 இறைவனடி சேர்ந்தார்.All the contents on this site are copyrighted ©.