2009-12-15 17:09:25

பெருங்கடல்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை உறிஞ்சாவிட்டால் உலக வெப்பநிலை மாற்றத்தின் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்


டிச.15,2009 பெருங்கடல்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை உறிஞ்சாவிட்டால் சுற்றுப்புற சூழலில் அந்த வாயுவின் அளவும் உலக வெப்பநிலை மாற்றத்தின் பாதிப்பும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

காடுகளை அழித்தல், பழைய பொருட்களை எரித்தல் உட்பட மனிதனின் நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் வாயுக்களின் அளவில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியை பெருங்கடல்கள் உறிஞ்சி விடுகின்றன என்றும் இந்தச் செயல்பாடு நடைபெறவில்லையெனில் சூற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

இன்னும், 2009ம் ஆண்டில் இடம் பெற்ற பெரும்பாலான பேரிடர் விபத்து இறப்புக்களுக்கு வெப்பநிலை மாற்றமே காரணம் என்றும் ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இடம் பெற்ற 245 பேரிடர்களில் 224 வெப்பநிலை மாற்றம் தொடர்புடையவை, மேலும், இக்காலக் கட்டத்தில் இறந்துள்ள 5 கோடியே 80 இலட்சம் பேரில், 5 கோடியே 50 இலட்சம் பேர் வெப்பநிலை மாற்றம் தொடர்புடைய பேரிடர்களில் இறந்தவர்கள் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
All the contents on this site are copyrighted ©.