2009-12-15 17:13:39

திருவருகைகாலச் சிந்தனை


திருவருகைகாலச் சிந்தனை வழங்குபவர் அருள்தந்தை டாம்னிக் சே.ச

RealAudioMP3 டிசம்பர் 16 எசாயா 45 : 6-8, 18, 21-25, லூக். 7,18-23

சத்தமாக பேசட்டும் நமது செயல்கள்

இயேசுவின் வருகைக்கு வழியைத் தயார் செய்தவர் திருமுழுக்கு யோவான். 'அவர் வளரவேண்டும் நான் குறைய வேண்டும்' என்று வித்தியாசமாக சிந்திப்பவர். இயேசு பணிவாழ்வை ஆரம்பித்ததும் இயேசுவை உலகுக்கு அடையாளம் காட்ட விரும்புகிறார். இவரே மெசியா என்று சுட்டிக்காட்டுவதற்கு முன் அதை உறுதிப்படுத்த விரும்புகிறார். தனது சீடர்களை அனுப்பி வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்று கேட்கிறார். இயேசுவின் பதிலும் வித்தயாசமாகத் தான் இருக்கிறது. கண்டவற்றையும் கேட்டவற்றையும் போய் சொல்லுங்கள் என்று ஒரு அடையாளத்தையும் சொல்லுகிறார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது என்பதே அந்த அடையாளம்.

இன்றைய தொடர்பு சாதன ஊடகங்கள் அதீத கற்பனையாலும் தொழில் நுட்பத்தாலும் இல்லாதவொரு கனவு உலகை சாமர்த்தியமாக கட்டமைக்கிறது. ஊடகங்களின் வண்ணக்கலவைகளும் மின்னும் ப்ளாஷ் வெளிச்சங்களும் புதிய மதீப்பீடுகளை கட்டமைக்கிறது. எதார்த்த வாழ்வினின்று அப்பாற்பட்ட நெறிபிறழ்ந்த முரண்பட்ட பார்வைகளை பரவலாக்கிறது. அன்பு அழகு மகிழ்ச்சி உறவுகுடும்ப உறவு போன்ற உன்னத உணர்வுகளை மதீப்பீடுகளை சந்தைப் பொருளாக்கி கூவி கூவி விற்கிறது. கனவு உலகில் கற்பனை குதிரைகளில் சஞ்சிரிக்கச் செய்கிறது?

இந்த விளம்பர உலகில் ஏழைகளின் வாழ்க்கைப் போராட்டங்கள் நம்பிக்கைகளாக அடையாளமாக்கப்படுமா? ஏழைகளின் அன்றாடப் பிராச்சனைகள் செய்திகளாக்கப்படுமா ஆடல் பாடல் தொடர்கள் எப்.எம் இரைச்சல்களுக்கு மத்தியில் ஏழைகளுக்கு மறுக்கப்படும் அநீதியும் தலைப்புச் செய்திகளாகுமா?All the contents on this site are copyrighted ©.