2009-12-14 16:16:38

உகாண்டா பேராயர்-சுற்றுச் சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகள் போன்றவைகளில் உரிய நடவடிக்கைகளை நாம் எடுக்கவில்லையெனில், குழந்தைகளுக்கான வருங்காலத்தை நாம் காப்பாற்ற முடியாது 


டிச.14,2009 சுற்றுச் சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகள் போன்றவைகளில் உரிய நடவடிக்கைகளை நாம் எடுக்கவில்லையெனில், குழந்தைகளுக்கான வருங்காலத்தை நாம் காப்பாற்ற முடியாது என்றார் Ugandaவின் Kampala பேராயர் Cyprian Lwanga.

தட்பவெப்ப நிலை மாற்றப் பிரச்சனை என்பது பொருளாதாரத்தோடு மட்டும் தொடர்புடையதல்ல, மாறாக ஒழுக்க ரீதி, ஆன்மீக, மறைப்பணி, அரசியல் மற்றும் தொழில் நுட்பமும் சார்ந்தது என்றார் பேராயர் Lwanga.

நம் வார்த்தைகளும், ஒழுக்கரீத்தி அர்ப்பணமும் நம் மனச்சான்றை சுத்தப்படுத்த உதவுமே யோழிய, உறுதியான நடவடிக்கைகளே மனித குலத்திற்கு நன்மைகளை ஆற்ற முடியும் என்ற பேராயர், தட்பவெப்ப நிலை குறித்தவைகளில் நீதியான முடிவெடுப்பதற்கு சர்வதேச அளவில் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் தேவை என்றார்.

தட்பவெப்ப நிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது, ஏற்கனவே துன்பங்களை அனுபவித்து வரும் ஏழை மக்களே என்பது ஏற்றுக்கொள்ளப்பட இயலாத கசப்பான உண்மை என மேலும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் Uganda பேராயர் Lwanga. 
All the contents on this site are copyrighted ©.