2009-12-14 16:15:07

ஒவ்வொரு கிறிஸ்தவ சபையும் தங்களிடையே ஒருவர் ஒருவருக்கான மதிப்பை வளர்க்க இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டம் அழைப்பு


டிச.14,2009 இந்தியாவின் ஒவ்வொரு கிறிஸ்தவ சபையும் தங்களிடையே ஒருவர் ஒருவருக்கான மதிப்பை வளர்ப்பதோடு பிற மதங்களின் நம்பிக்கைகளையும் மதிப்பவர்களாகச் செயல்பட வேண்டுமென அண்மையில் போபாலில் இடம் பெற்ற இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டம் அழைப்பு விடுத்துள்ளது.

பேராயர் லியோ கொர்னேலியோவின் தலைமையின்கீழ் நடைபெற்ற இக்கிறிஸ்தவ சபைகளின் கூட்டத்தில் போபால் கிறிஸ்தவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டது.

கிறிஸ்தவ சபைகளுக்கிடையே விசுவாசிகளை ஒரு சபையிலிருந்து இன்னொரு சபை ஏமாற்றி கவர்ந்திழுப்பது குறித்து தீவிர விவாதங்கள் இடம் பெற்ற இக்கூட்டத்தில் கிறிஸ்தவ விசுவாசிகள் ஒரு சபைவிட்டு சபை மாறுதல் குறித்து ஆராயப்பட்டு தீர்வு காணப்பட வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டது.

கிறிஸ்தவ சபைகள் ஒருவர் மற்றவர் மீதான அக்கறையை மட்டுமல்ல, மற்ற மதங்களின் நம்பிக்கை மீதான மதிப்பையும் வெளிப்படுத்த வேண்டுமென பேராயர் லியோ கொர்னேலியோ அழைப்பு விடுத்தார்All the contents on this site are copyrighted ©.