2009-12-14 16:30:16

நற்செய்தி மத்.21, 28-32


மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார்.29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை.31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.
All the contents on this site are copyrighted ©.