2009-12-14 16:13:00

நம்பிக்கை செய்தி : ஏழைகளின் மீதான அக்கறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பே தன் மறை பணியின் மேலான  சமூக முக்கியத்துவங்களாக இருக்கும், பிலிப்பின்ஸ் ஆயர்


டிச.14,2009 ஏழைகளின் மீதான அக்கறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பே தன் மறை பணியின் மேலான  சமூக முக்கியத்துவங்களாக இருக்கும் என அறிவித்துள்ளார் பிலிப்பின்ஸின் ஆயர் ஒருவர்.
பிலிப்பின்ஸ் Legazpiயின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் ஜோயல் பேலன் (Joel Baylon) உரைக்கையில், சுரங்கத்தொழில் விரிவடைந்து வருவதால் ஏழை விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு வருவதாகவும், பெரிய முதலாளிகளால் ஏழை மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டார்.
சுரங்கத் தொழிலால் பல்வேறு உயிரினங்களும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டிக்கும் அதிகாரம் அற்ற தலத் திருச்சபை, இதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க மக்களுடன் இணைந்து அரசியல் தலைவர்களை வலியுறுத்தும் என்றார் ஆயர் பேலன்.All the contents on this site are copyrighted ©.