2009-12-14 16:14:12

துன்பங்களை நம்பிக்கையாக மாற்றக் காத்திருப்பது திருவருகைக் காலத்தை ஒத்ததே என்கிறார் பாப்பிறை.


டிச.14,2009. துன்பங்களை நம்பிக்கை மற்றும் மீட்பாக மாற்ற வல்ல இறைவனுக்காக காத்திருக்கும் காலமாக நோயை நோக்கும்போது, இத்திருவருகைக் காலத்தை ஆழமானமுறையில் நோயாளிகள் வாழமுடியும் என்றார் பாப்பிறை பதினாறாம் பெனெடிக்ட்.

முற்றிய நோயினால் துன்புறுவோர்க்கான ரோம் அமைப்பின் திரு இருதய மருத்துவமனைக்கு இஞ்ஞாயிறு காலை சென்று அங்குள்ள ஏறத்தாழ 30 நோயாளிகளை சந்தித்து உரை வழங்கிய பாப்பிறை, ஒவ்வொரு நோயாளியும் தன் துன்பகாலங்களில் ஆதரவளித்து மதிப்பளிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நோயாளிகளை புரிந்துகொண்டு ஆறுதலும் ஊக்கமும் அளித்து, கிறித்தவ ஒருமைப்பாடுணர்வுடன் அவர்கள் அருகில் இருப்பது குறித்தும், அன்பின் உறுதியான வெளிப்பாடுகளின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார் பாப்பிறை.
All the contents on this site are copyrighted ©.