2009-12-14 16:15:22

ஜெர்மனியில் இறையழைத்தல்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது


டிச.14,2009 ஜெர்மனியில் இறையழைத்தல்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையோடு ஒப்பிடும் போது தற்போது குருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறும் ஜெர்மன் ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் மத்தியாஸ் கோப், ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல் ஜெர்மனியிலும் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பையும் கத்தோலிக்கரின் எண்ணிக்கைக் குறைவையும் காண முடிகின்றது என்றார்.

2004ம் ஆண்டு ஜெர்மனியில் குருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை 1122 ஆக இருந்தது தற்போது 842 ஆகக்குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

குருக்கள் ஆண்டு கொண்டாடப்படும் இன்றைய சூழலில் இறையழைத்தல்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒவ்வொரு மறைமாவட்டமும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜெர்மன் ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் மத்தியாஸ் கோப் தெரிவித்தார்.
All the contents on this site are copyrighted ©.