2009-12-14 16:19:23

திருவருகைகால சிந்தனை டிசம்பர் 15 செப். 2: 1-2, 9-12, மத்.21:28-32


திருவருகைகால சிந்தனை – வழங்குபவர் அ.பணி டாமினிக் சே.ச.

RealAudioMP3 நாம் எந்த வகை?

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். மிகவும் நல்லவர். உதவும் உள்ளம் கொண்டார். உதவி என்று யார் வந்தாலும் 'உடனே செய்கிறேன்' என்பார். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று உதவி கேட்டவருக்கு உள்ளம் பூரிப்படையும். ஆனால் அவர் சொன்னதை மட்டும் செய்யவே மாட்டார். எப்போது கேட்டாலும் 'இதோ உடனே செய்கிறேன்' என்று கிளிப்பிள்ளை போல சொல்வார். சரி என்று சொல்வதற்கு முன் அவர் யோசிப்பாரா? என்ற சந்தேகம் பலமுறை என்னில் எழுந்ததுண்டு.

மனிதர்கள் பல வகை. பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் மனித குலத்தை மூவகையாகப் பிரித்தார். சொல்லிச் செய்பவர்கள் முதல்வகை. தாமாக எதையும் யோசிக்கமாட்டார்கள். ஆனால் அடுத்தவர் சொல்வதில் அர்த்தமிருந்தால் உடனே அதை செய்வார்கள். அடுத்தவகை பிறர் என்னதான் சொன்னாலும் ஒரு காரியத்தை செய்யமாட்டார்கள். சொந்தமாகவும் யோசிக்கமாட்டார்கள். அடுத்தவர் சொல்லித்தந்தாலும் கேட்கமாட்டார்கள். இவர்கள் கல்லையும் மண்ணையும் போன்றவர்கள். மூன்றாவது சுயமாக யோசிப்பவர்கள். புதிதாக யோசிப்பவர்கள். தாமாக முன்வந்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தருபவர்கள். உப்பாக ஒளியாக வரலாற்றுக்கே வெளிச்சம் தருபவர்கள். வரலாற்றை முன் நகர்த்துபவர்கள். நாம் எந்த வகை?
All the contents on this site are copyrighted ©.