2009-12-14 16:09:42

திருத்தந்தையை சந்தித்தார் Montenegro பிரதமர்.


டிச.14,2009. இத்திங்கள் காலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டை திருப்பீடத்தில் சந்தித்து இன்றைய சர்வதேச நிலைகள்

குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார் Montenegro வின் பிரதமர் Milo Djukanovic.

திருத்தந்தைக்கும் பிரதமருக்கும் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பில், இன்றைய சர்வதேச சூழல், கிழக்கு ஐரோப்பாவின் நிலைகள், உலகம் இன்று எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் ஆகியவை குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Montenegroவின் சிறுபான்மை கத்தோலிக்க சமூகம் அந்நாட்டிற்கு ஆற்றிவரும் சிற்ப்புப் பங்களிப்பு குறித்தும் பிரதமர் Djukanovic திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார்.

மொந்தேநேக்ரோவின் மதங்களிடையே அமைதியை ஊக்குவிக்க அந்நாட்டு அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் விளக்கினார்.
All the contents on this site are copyrighted ©.