2009-12-14 16:11:56

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை.


டிச.14,2009. உலகின் மகிழ்வைவிட வித்தியாசமானதான கிறிஸ்தவ மகிழ்வின் சுவையை மீண்டும் கண்டுகொள்ள திருச்சபை உதவுகிறது என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று ரோம் புனித ராயப்பர் பசிலிக்கா பேராலய வளாகத்தில் குழ்ந்தைகளின் இயேசு பாலன் சுரூபங்களை ஆசீர்வதிக்க்கும் பாரம்பரிய வழக்கத்தையொட்டி கூடியிருந்த சிறார்கள் மற்றும் பெரியோர்களுக்கு உரை வழங்கிய பாப்பிறை, பாரம்பரியக் கிறிஸ்துமஸ் குடில்களை வீடுகளில் அமைப்பது நல்லதே, ஆனால் அதே வேளை அக்குடில்கள் வலியுறுத்தி நிற்கும் மதிப்பீடுகளை வாழ்வது அதனினும் சிறப்பு என்றார்.

தன் மூவேளை ஜெப உரையின் இறுதியில், கடந்த வாரம் ஆப்ரிக்காவில் நான்கு மறைபோதகர்கள் கொல்லப்பட்டது குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் பாப்பிறை.
All the contents on this site are copyrighted ©.