2009-12-12 16:07:35

டிச.13, இன்றைய புனிதர்: புனித லூசியா


இத்தாலியின் சிரக்யூஸ் நகரில் செல்வக் குடும்பத்தில் பிறந்த லூசியா, கிறிஸ்தவ மறைசாட்சிகளில் மிக விரைவில் புகழடைந்தார். விதவையான அவரது தாயின் நிர்பந்தத்தினால் பிரபு ஒருவரை மணந்தார். இரத்தப்பெருக்கினால் நோயுற்ற தன் தாயை கட்டோனியா அழைத்துச் சென்று, அங்கு புனித ஆகத்தாவின் ஆலயத்தில் மன்றாடியபின், தாய் குணமடைந்தார். இதனால் மனமாற்றம் அடைந்த தன் தாயின் அனுமதியோடு, தன் உடமைகள் அனைத்தையும் ஏழைகளிடம் பகிர்ந்தளித்தார் லூசியா. தியோக்ளீஷியன் காலத்தில் திருமறைக்கெதிராக நடந்த வன்முறைகளின் போது மிகுந்த சித்திரவதைகளுக் குள்ளாகி, இறுதியில் டிசம்பர் 13 உயிர்துறந்தார்.All the contents on this site are copyrighted ©.