2009-12-12 16:00:03

இந்தியாவில் நல ஆதரவு திட்டங்களில் தலதிருச்சபையின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார் பிரபல மருத்துவர்


டிச.12,2009 இந்தியாவில் நல ஆதரவு திட்டங்களில் தலதிருச்சபையின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடும் படியானது என பாராட்டியுள்ளார் பிரபல மருத்துவர் N.Jindal.
ஆசியாவின் முதல் மருத்துவக் கல்லூரியான கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் N Jindal உரைக்கையில், நாகரீகத்தின் துவக்கக் காலத்திலேயே மருத்துவமும், விசுவாசமும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருப்பதைக் காண முடிந்தது என்றார். மருந்துகளையும், மருத்துவமனைகளையும் மேம்படுத்துவதில் தலத் திருச்சபை காட்டி வரும் ஆர்வம் பாராட்டும் படியானது என்ற அவர், நோயாளிகளைக் குணப்படுத்துவது திருச்சபையின் மறைபணியாகவே இருந்துள்ளது என்றார். நோயாளிகளுள் நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு சிகிச்சையின் பலன் அதிகமாக இருப்பதைத் தான் அனுபவத்தில் கண்டாதாகவும் கூறினார், இந்து மதத்தைச் சார்ந்த மருத்துவர் N.Jindal.All the contents on this site are copyrighted ©.