2009-12-12 15:58:42

நம்பிக்கைச் செய்தி - பாகிஸ்தானின் கிறிஸ்துவ சபைகள் கிறிஸ்துமஸ் காலத்தின் போது விதவைகளுக்கு நிதியுதவி


டிச.12,2009 இக்கிறிஸ்துமஸ் காலத்தின்போது ஏழை விதவைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன பாகிஸ்தானின் கிறிஸ்துவ சபைகள்.
பாக்கிஸ்தானின் கத்தோலிக்க மற்றும் ஏனைய கிறிஸ்துவ சபைகள் இணைந்து செயலாற்ற உள்ள இத்திட்டத்தின் மூலம் இம்மாதம் 20ஆம் தேதி அந்நாட்டின் 70 விதவைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஒவ்வொரு பங்கு தளமும் இவ்வாண்டில் கிறிஸ்துமஸ் காலத்தின் போது விதவைகளுக்கு அடிப்படை உணவுப் பொருட்களை வழங்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. பாக்கிஸ்தானின் லாகூர் தூய இதய பேராலயத்தில் விதவைகளுக்கு நிதிஉதவி வழங்கும் விழா இம்மாதம் 20ஆம் தேதி இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.All the contents on this site are copyrighted ©.