2009-12-11 15:34:06

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டு எழுத்தாளருக்கு  திருத்தந்தை விருது வழங்கினார்


டிச.11,2009 இவ்வியாழனன்று அனுசரிக்கப்பட்ட மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் நினைவாக மனித உரிமைகளை நிலைநிறுத்தப் பாடுபடுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதையொட்டி, இவ்வாண்டு இந்த விருதை பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த Andre Glucksmann என்ற எழுத்தாளருக்கு திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் வழங்கினார். ஆஸ்திரியா நாட்டின் யூத குலத்தில் பிறந்த Glucksmann இரண்டாம் உலகப் போரின் போது தானும், தான் குடும்பமும் அடைந்த பல்வேறு இன்னல்களைப் புத்தகங்களாக வடித்திருக்கிறார். புதன் பொது மறைபோதகத்திற்குப் பின், தனிப்பட்ட வகையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் Krakow மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரான Cardinal Franciszek Macharski, இவ்விருதை நிறுவிய Auschwitz Instituteன் தலைவர் Andrej Zoll  ஆகியோரும் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.