2009-12-11 15:32:11

நம்பிக்கைச் செய்தி: சுற்றுச்சூழல் குறித்த உலக மாநாட்டினை முன்னிட்டு ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் அவை ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி டாலர்கள் நிதி உதவி


டிச.11,2009 கொப்பன்ஹாகனில் நடைபெறும் சுற்றுச்சூழல் குறித்த உலக மாநாட்டினை முன்னிட்டு ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் அவை ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி டாலர்கள் நிதி உதவி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இவ்வெள்ளியன்று நடைபெற்றுள்ளன. இந்த நிதி உதவியில் பிரிட்டனும், ஸ்வீடனும் அதிக அளவு வழங்குவதாகவும், ஏனைய ஐரோப்பிய நாடுகள் இன்னும் கூடுதல் நிதி உதவி செய்வதற்கான வழிமுறைகள் ஆராயப்படுவதாகவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இந்த நிதியானது, ஏழை நாடுகளின் கடற்கரைகளைப் பாதுகாத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் பாசன வசதிகளைப் பெருக்குதல், காடுகளைப் பாதுகாத்தல், சூரிய ஒளி, காற்று இவைகளைப் பயன்படுத்தி தேவையான அளவு சக்தியைப் பெறுதல், வெப்பமயமாதலால் உருவாகும் பல நோய்களினின்று மனித குலத்தைக் காத்தல் போன்ற முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2012 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஏழை நாடுகளில், சிறப்பாக ஆப்பிரிக்காவில் வெப்பமயமாக்கலைத் தடுப்பதற்கான தீவிர முயற்சிகளுக்கு 900 கோடி டாலர்கள் வரை வழங்கும் முடிவெடுப்பதில் ஐரோப்பிய ஐக்கியம் ஈடுபட்டிருப்பதாக இச்செய்தி மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.