2009-12-11 15:33:50

பேராயர் பேத்ரோ லோபெஸ் க்விந்தானா கனடா நாட்டின் திருப்பீடத் தூதராக நியமனம்


டிச.11,2009 திருப்பீடத்தின் இந்தியத் தூதராக இதுவரை பணியாற்றிய பேராயர் பேத்ரோ லோபெஸ் க்விந்தானாவை  (Pedro Lopez Quintana) கனடா நாட்டின் திருப்பீடத் தூதராக நியமித்துள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட். இவ்வியாழனன்று நண்பகல், அதாவது, இந்திய நேரம் மாலை 4.30 மணி அளவில், இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பேராயர் க்விந்தானாவை இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் திருப்பீடத் தூதராக நியமித்தார்.All the contents on this site are copyrighted ©.