2009-12-11 15:34:52

பிலிப்பீன்ஸில் ஊரடங்குச் சட்டத்தால் கிறிஸ்மஸ் கால நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன


டிச.11,2009 கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இனக்கலவரங்களினால், பிலிப்பீன்ஸ் நாட்டில் Maguindanao பகுதியில் டிசம்பர் 4 முதல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள பங்குக் கோவில்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் திருவருகைக் கால மற்றும் கிறிஸ்மஸ் கால நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று குழந்தை இயேசுவின் தெரசா பங்கில் பணிபுரியும் அருட்தந்தை Eduardo Vasquez கூறினார். கிறிஸ்மஸ் காலத்தில் தெருக்களிலும், சாலைகளிலும் பாடல்கள் பாடுதல், இரவு நேர திருப்பலிகள் நிகழ்த்துதல் ஆகியவை இந்தப் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது கிறிஸ்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளதென அருட்தந்தை Vasquez கூறினார். Cotabato மறைமாவட்டத்தின் துணை ஆயர் Colin Bagaforo நள்ளிரவு திருப்பலிகள் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும், மக்கள் மாலையில் இப்பலிகளை நிறைவேற்ற விரும்பி வேண்டுவதைக் காண்பதற்கு மகிழ்வாக உள்ளதெனக் கூறினார்.All the contents on this site are copyrighted ©.