2009-12-11 15:45:37

திருவருகைக்காலச்சிந்தனை.


டிசம்பர் 12. திருவருகைகாலச் சிந்தனை வழங்குபவர் அருள்தந்தை டாம்னிக் சே.ச
RealAudioMP3 ஆண்டவன் அருள்பெறுவோம். அற்புதங்களைச் செய்யும் கருவியாவோம்.
கடந்த இந்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி முக்கிய காரணமாக ராகுல் காந்தியின் அணுகுமுறையை வெளிச்சமிட்டு காட்டினார்கள். அவர் ஏழைகளின் குடிசைகளுக்குச் சென்றது அக்குடிசைகளில் அமர்ந்து பேசியது உண்டது. ஏழைகளோடு அவர் செலவழித்த மணித்துளிகள் எல்லாம் ஏழைமக்களை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்ல. ஓட்டுக்களாகவும் மாற்றியது ஏன்? என்பதற்கு விடை எல்லாருக்குமே தெரியும்.
அதிகாரத்தில் இருப்பவர் ஏழைவீடு தேடிவந்தாலே அதியசமாக பார்க்கிறோhம். வல்லமையுள்ள இறைவன் நம்மை தேடிவருவது கிடைத்தற்கரிய பேறல்லவா? 'தூயகத்திலிருந்து எழுந்து வந்து உன் நடுவில் நான் குடிகொள்வேன். உன் நடுவில் தங்கியிருப்பேன்' என்ற சக்கரியாவின் திருநூலிலிருந்து தரப்படும் வார்த்தைகள் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரகிறது. வல்லமைமிக்க கடவுள் நம்மிடம் வரப்போகிறோர் என்பது முதற்காரணம். அந்த இறைவன் நம் நடுவில் தங்கியிருக்கப்போகிறார் என்பது இரண்டாவது காரணம். இறைவன் நம்மிடையே வருவதால் மானிடர் அனைவரும் நாம் வாழும் இந்த பூமி வாழ உதவுகிற இயற்கை அனைத்துமே ஆண்டவனின் அருளால் நிரப்பப்படுகிறோம். ஆண்டவனின் அருளால் நிரப்பபட்ட நாம் அனைவரும் ஒரே குலம்- மனித குலம் என்று உணர்வோம். மனிதகுல ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் சாதி மத இன நிற வேறுபாடு போன்ற அநீத அமைப்புகக்களை உடைத்தெறியும் கருவியாவோம். இம்மாரும் சேனையில் அன்னைமரியாளின் அடியொற்றி அணிதிரள்வோம்.All the contents on this site are copyrighted ©.