2009-12-10 15:36:29

வியட்நாம் அரசுத்தலைவருக்கும் வத்திக்கான் அதிகாரிகளுக்கும் இடையே இவ்வெள்ளியன்று இடம் பெறவுள்ள சந்திப்புகள், திருத்தந்தையின் அந்நாட்டுக்கானத் திருப்பயணம் இடம்பெற வழிவகுக்கும் - தலத்திருச்சபை அதிகாரிகள் நம்பிக்கை


டிச.10,2009 வியட்நாம் அரசுத்தலைவருக்கும் வத்திக்கான் அதிகாரிகளுக்கும் இடையே இவ்வெள்ளியன்று இடம் பெறவுள்ள சந்திப்புகள், வியட்நாமுக்கும் திருப்பீடத்துக்குமிடையேயான அரசியல் உறவு மற்றும் திருத்தந்தையின் அந்நாட்டுக்கானத் திருப்பயணம் இடம்பெற வழிவகுக்கும் என்ற தங்கள் நம்பிக்கையை தெரிவித்துள்ளனர் வியட்நாம் திருச்சபை அதிகாரிகள்.

இப்புதன் முதல் சனிக்கிழமை வரை இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வியட்நாம் அரசுத்தலைவர் Nguyen Minh Triet I, இவ்வெள்ளியன்று திருத்தந்தை 16ம் பெனடிக்டை வத்திக்கானில் சந்திக்கவுள்ளதை முன்னிட்டு இவ்வாறு தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர் தலத்திருச்சபை அதிகாரிகள்.

1975ம் ஆண்டு ஏப்ரலில் கம்யூனிச அதிகாரிகள் வியட்நாமை ஒன்றிணைத்ததற்குப் பின்னர், அந்நாட்டு அரசு, வெளிநாட்டு மறைப்பணியாளரை நாட்டை விட்டு வெளியேற்றியது மற்றும் திருப்பீடத்துடோடு இருந்த அரசியல் உறவையும் முறித்துக் கொண்டது.

எனினும், 2007ம் ஆண்டிலிருந்து வியட்நாம் அரசு, சமயம் சார்ந்த தனது கொள்கைகளைச் சற்றே தளர்த்தியுள்ளது என்று அந்நாட்டு மூத்த குரு ஒருவர் கூறினார்.
All the contents on this site are copyrighted ©.