2009-12-10 15:23:35

திருவருகைகாலச் சிந்தனை


திருவருகைகாலச் சிந்தனை வழங்குபவர் அருள்தந்தை டாம்னிக் சே.ச
குழந்தைகள் நடை பயிலும் அழகே அழகு. குழந்தைகள் நடைவண்டியை தள்ளி வரும்போது கள்ளமில்லா மகிழ்ச்சி குழந்தைகளின் முகத்தில் துள்ளிவரும். சிரிப்பலைகள் எழுந்துவரும். பெரியவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு சில குழந்தைகள் நடைபயில்வர். அதீத நம்பிக்கையுடன் அடி மேல் அடி வைத்து நடப்பவர். பெரியவர்கள் கையைவிட்டு நடைபயிற்றுப் போதும் பக்கத்தில் இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்ற தைரியத்தோடு நடைபயில்வர்.

குழந்தைகள் நடைபயில்வது போலத்தான் வாழ்க்கையும். அருகிருப்போரின் ஆறுதலும் பக்கத்திலிருப்போரின் பாசமும் நம் கால்களுக்கு வலுவூட்டுது நிச்சயம் தான். அதற்கும் மேலான சக்தி காக்கும் கடவுளிடமிருந்து வருகிறது. மேலிந்து வரும் அந்த சக்திதான் நாம் தடுமாறி வீழாமல் தாங்கிப்படுகிறது. தடுக்கி விழுந்தாலும் எழுந்து நடக்க தெம்பளிக்கிறது.
கடவுளின் வலக்கரத்தை பிடித்துக்கொண்டு நடைபயில்வோம். அப்போது கடந்த காலத்தின் பாரங்கள் நம்மை அழுத்தாது. எதிர்காலத்தின் கவலைகள் நம் காலடிகளைத் தடுமாறச் செய்யாது. 'உன் வலக்கையைப் பிடித்து அஞ்சாதே. உனக்குத் துணையாய் இருப்பேன்' என்ற எசயா இறைவாக்கினரின் வார்த்தைகள் நமக்கு திடமளிக்கிறது. அந்த வார்த்தகைளே நம் காலடிகளுக்கு விளக்காகட்டும். வெளிச்சமாகட்டும். மனிதஉரிமை தினமான இன்று எல்லாரும் வாழ்வாங்கு வாழ வழிகாட்டட்டும்

RealAudioMP3All the contents on this site are copyrighted ©.