2009-12-10 15:38:14

தென்னாப்ரிக்காவில் 70 வயதாகும் ப்ரெஞ்ச் அருள்தந்தை சுட்டுக் கொலை


டிச.10,2009 தென்னாப்ரிக்காவில் இஞ்ஞாயிறன்று 70 வயதாகும் அருள்தந்தை லூயிஸ் புளோன்டெல் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஐந்து இளையோர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்தது.

பிரான்ஸ் நாட்டவரான அருள்தந்தை புளோன்டெல் ஆப்ரிக்க மறைபோதகச் சபையைச் சேர்ந்தவர். இவர் டான்சானியாவில் 15 ஆண்டுகளாக மெய்யியல் கற்பித்து வந்தார். 1987ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில், தனது மறைப்பணியைத் தொடங்கினார்.

இச்சபையின் இல்லத்திற்குத் திருடச் சென்ற இளையோர் ஜன்னல் வழியாக நுழைந்து பல பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். முன்பக்கக் கதவைத் திறக்கச் சென்ற அருள்தந்தை புளோன்டெலைச் சுட்டுக் கொலை செய்துள்ளனர் என்று அத்துறவு சபையின் அதிபர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்All the contents on this site are copyrighted ©.